top of page
Search

Time, the ruthless.

  • Writer: The K Cafe
    The K Cafe
  • Jul 10, 2020
  • 1 min read

Updated: May 19, 2022


ree


நான் தேடினேன்‌ தேடி அழைந்தேன, இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்பும் வாழ்க்கையின் பயனை.

என்ன அதிசயமோ என்னால் மட்டும் அதைக் கண்டாலும் ஏற்க இயலவில்லை. ஒருவேலை சில மனிதர்கள் இவ்வாறே படைக்கப்பட்டு வாழ்ந்தும் ஆக வேண்டும் என்பது ஒரு விதமான நியதியோ என்று என்னை எண்ண வைக்கிறது.


ஏற்க இயலாதவற்றை ஏற்றால் மட்டுமே வருவேன் என்று என்னிடம் கட்டளையிடும் தூக்கத்திடம் நான் என்ன கூறி மன்றாடுவேன்? கண்ணா, நீ இன்று என்னை அனைத்துக்கொண்டு இந்த இருட்டை போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கு, நாளை என்ற இல்லாத ஒன்றை அது வரும் பொழுது பார்த்துக்கொள்ளாம் என்ற பொய்யை சொல்லி எப்படி மன்றாடுவேன்?


மன்றாடதான் இயலாது ஏமாற்றி விடலாம் என்று எண்ணும் போதுதான் தெளிவாக தெரிகிறது வாழ்வனைத்தையும் செய்துகொண்டுகிறேன் என்று.


மொழி கூட புரியாத நிலையோ என்னவோ. தன் வாழ்க்கையின் இன்றைய நிலைக்கு காரணம் தானே தான் என்பதை உணர்ந்த மனிதன் எப்படி அதனுடன் அமைதியை நாட இயலும்? அதுதான் வழி என்றும் எனது ஏற்காத மனமிடம் கதறுகறேன். அது கேட்காது கேட்டாலும் மாறாது.


காற்றிலும் வெப்பம், உள்ளிளும் வெப்பம். தனிக்க மழை கூட உதவுவதில்லை. தினம் காலையில் எழுந்து தேதியை பார்க்கும் போது தோன்றுகிறது, காலம் எதற்கும் உதவாது. காலம் ஒரு துரோகி. படுபாவி. பிசுனாரி. மொட்டை மாடியில் நிற்கிறேன் காற்றில் சற்று ஈரம் திடீரென்று, ஒரு தென்றல். சட்டென்று. மேலே பார்த்தால் நிலா. உலகில் அனைவரும் என்போல் என்ற கேவளமான சுகம், துயரத்திலும் தனிமை வேண்டாமே என்று.


கிழக்கை நோக்கி காத்திருக்கிறேன், சூரியன் உதித்தவுடன் ஒருவித தெளிவு பிறக்கும் என்ற பேராசை.


இப்படி எழுதுவதில் இனம்புரியா சுகம் ஆனால் இவ்வுலகிற்கும் நட்புகளுக்கும் சகிக்காது போலும்.



 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin
  • generic-social-link

©2020 by The K cafe. Proudly created with Wix.com

bottom of page